மன்னியுங்கள்! மீண்டும் கட்சிக்கு வாருங்கள்! அன்வார் அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

 ஆகஸ்ட் 16,

PKR கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பும்படி PKR தலைவரும் பிரதமருமான DATUK SERI Anwar Ibrahim கோரிக்கை விடுத்ததுடன் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நான் தவறு செய்து இருக்கிறேன் என நீங்கள் நினைத்தால், கட்சியில் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தால் நான் வெளிப்படையாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். 

கட்சியை விட்டு வெளியேறிய அனைவரும் மீண்டும் கட்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மீண்டும் வாருங்கள். நமது போராட்டத்தை நடத்த நீங்கள் வேண்டும் என PKR தலைவரும் பிரதமருமான DATUK SERI Anwar Ibrahim கேட்டுக்கொண்டார். 

முன்னதாக PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்ட Tian Chua, Xavier Jayakumar ஆகிய இருவரும் PKR தேசிய மாநாட்டில் இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகின. 2021 மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் PKR நாடாளுமன்ற உறுப்பினரான Xavier Jayakumar முகைதீனுக்கு ஆதரவளித்ததால் PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் BATU நாடாளுமன்றத்தில் PKR வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டதால் Tian Chua கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் PKR கட்சியிலிருந்து விலகியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *