பரவாயில்லை! விலகி செல்லுங்கள்! அன்வார் காட்டம்!
- THINAGAREN SANGGAREN
- 04 Oct, 2026
அக்தோபர் 4,
பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பவர்கள் சுமுகமாக வெளியேற வேண்டும் என பி.கே.ஆர் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார். நான் யாரையும் கடினமானச் சொற்களைப் பயன்படுத்தி ஒதுக்க விரும்பவில்லை. எல்லோரையும் அரவணைக்கவே விரும்புகிறேன். ஆனாலும் சிலர் வேண்டாம், நான் போகிறேன் என்றால் நான் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை, அவர்களுடைய மக்கள் நலப்பணிகள் தொடரட்டும் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவின்
பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Lee Chean Chung கடந்த ஓராண்டுக் காலமாகக் கட்சிக் கூட்டங்களிலும்
மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை என்பதை Datuk Seri Anwar Ibrahim சுட்டிக்காட்டினார். கட்சியின் உறுப்பினராக
அவர் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக அவருடைய செயல்பாடுகளைப்
பாதிக்கும்படியாகப் பக்காத்தான் தலைமை செயல்படவில்லை என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
நிதிகளைப் பெற முறையான ஆவணங்களுடனும், முறையான கட்டமைப்புகளுடனும்
இருந்தால் மட்டுமே வழங்கப்படும் என்பதைப் பிரதமரும் பி.கே.ஆர் தலைவருமான Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

