அன்வாருக்கு ஆதரவளித்த அம்னோவின் PUAD ZARKASHI!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 5,

அம்னோ தலைவர்கள் பலர் இன்னும் குறுகிய மனப்பான்மையிலேயே இருப்பதாக அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் PUAD ZARKASHI தெரிவித்தார். நேற்று FELDA Ulu Tebrauவில் பிரதமர் அன்வார் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜொகூர் மாநில முன்னாள் சபாநாயகரும் அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான PUAD ZARKASHI கலந்து கொண்டு அன்வாரை வரவேற்றார். RENGIT சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான PUAD ZARKASHI கடந்த காலங்களில் அம்னோவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பொறுப்பில் இருந்த PUAD ZARKASHI, கடந்த வாரத்தில் ஜொகூர் மாநில அம்னோவிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அம்னோவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான PUAD ZARKASHI அம்னோவிலிருந்து விலகுவதால் அம்னோவின் பலம் குறையும் என எதிர்பார்கப்பட்டு வருகிறது.

தற்போது அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான்னுக்கு ஆதரவாக ஜொகூர் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அம்னோவின் பிடிவாதம் மேலும் அம்னோவை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் என PUAD ZARKASHI தெரிவித்தார். ஏனெனில் அம்னோவில் இளம் தலைமுறையினர் இல்லை. அம்னோவை இன்னும் பழமைவாதிகளே ஆட்சி செய்கிறார்கள் என PUAD ZARKASHI தெரிவித்தார். நான் அம்னோவிலிருந்து முழுமையாக விலகிவிட்டேன். நான் Hishamuddin Hussien போல், அம்னோவில் இருந்துக் கொண்டே முகைதீனை ஆதரிக்கவில்லை. அம்னோவின் துரோகிகளை மீண்டும் அம்னோவுக்குள் இணைப்பதில் எந்தவோர் ஆதாயமும் அம்னோவுக்கு இல்லை என PUAD ZARKASHI தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *