தலைநகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது! கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!
- Shan Siva
- 15 Oct, 2024
கோலாலம்பூர், அக் 15: மலேசிய
வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) முன்னறிவித்தபடி, இடியுடன் கூடிய
மழை மற்றும் பலத்த மழை நகரம் மற்றும் பல மாநிலங்களை பாதித்துள்ளது, இந்நிலை இன்றும் தொடரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை பெய்த மழையைத் தொடர்ந்து கோலாலம்பூரின் சில
பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
நகரின் பல இடங்களில் இருந்து திடீர் வெள்ளம் பற்றிய
அறிக்கைகள் கிடைத்துள்ளதாக DBKL தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்றை நாடாளுமன்றக்
கூட்டம் சற்றுத் தாமதமாகத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சாலையில் கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 10.50 மணியளவில் SMART சுரங்கப்பாதை
வெள்ள நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்மலேசியாவின் கூற்றுப்படி, மலேசியாவின்
மேற்குப் பகுதி இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில்
கிழக்குப் பகுதிகள் இன்று பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *