சீன போர் விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் ராணுவம்!

top-news
FREE WEBSITE AD

பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஒகினாவா தீவு அருகே அத்துமீறி வந்த சீன போர் விமானத்தை ஜப்பான் போர் விமானங்கள் விரட்டியடித்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒகினாவா தீவு அருகே ஜப்பானுக்குச் சொந்தமான எப்-15 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சீன கடற்படைக்குச் சொந்தமான லியோனிங் கப்பலில் இருந்து புறப்பட்ட ஜே-15 என்ற போர் விமானம் ஜப்பான் விமானத்தின் அருகே சென்றது. மேலும் அந்த சீன விமானம் ரேடார் மூலம் ஜப்பான் விமானத்தைத் தாக்க முயற்சித்தது. இதனையடுத்து அங்கு விரைந்த ஜப்பானிய போர் விமானங்கள் சீன விமானத்தை விரட்டியடித்தன.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான் ராணுவ மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலையிட்டதாகக் கூறி சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரு நாடுகளின் உறவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. சீனா தரப்பில் இதுவரை இந்தச் சம்பவம் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *