தீ விபத்துக்குப் பிறகு செயல்படத் தொடங்கியது பாப்பார் மருத்துவமனை!

top-news
FREE WEBSITE AD

பாப்பார், நவம்பர் 13: பாப்பார் மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளாக, நேற்று மீண்டும் வழக்கம்போல் சேவைகள் தொடங்கியது.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மிக அருகில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு உடனடியாக செயல்படத் தொடங்கியது என்று மாநில சுகாதாரத்துறை துணை இயக்குநர் டத்தோ டாக்டர் அப்துல் கஹார் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

அனைத்து சேவைகளும் வழக்கம் போல் சீராக இயங்குவதாகவும்,  அவசர சிகிச்சைப் பிரிவு கூட தீயணைப்புத் துறையின் அனுமதியைப் பெற்ற பிறகு காலை 10.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மருந்து விநியோகம் குறித்து, அரசு மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளுடன் கூடிய கூட்டங்கள் மூலம் தற்செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் மருந்துகளை வழங்குவதாக கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *