நியூ பாண்டாய் அதிவேக நெடுஞ்சாலையில் கார் விபத்து- ஓட்டுனர் பலி! உடனிருந்தவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

இன்று காலை 8 மணியளவில் நியூ பாண்டாய் அதிவேக நெடுஞ்சாலையின் கிமீ14.9 இல் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் உடனிருந்த ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவம் தொடர்பாக தங்களுக்கு காலை 8.28 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும்,செபுதே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒன்பது பேர் கொண்ட குழு, தீயணைப்பு மீட்பு டிரக் மற்றும் அவசர மருத்துவ மீட்பு சேவை வேனுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.வந்தவுடன், விபத்து  ஏற்பட்டதாகக் கருதப்படும் Toyota Vios கார் தீப்பிடித்து எரிவதைக் கண்டோம் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல் இயக்குநர் ரோசிஹான் அன்வர் மாமத் கூறுகையில், .

ஓட்டுனரின் சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த நபர்  மலாயாபல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் காரை நிறுத்தி தீப்பிடித்து எரிவதற்குள் இருவரையும் வெளியே இழுக்க உதவியது தெரிய வந்தது.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *