தலைநகரில் மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்தநாள் விழா! அடிகளாரின் பெயரன் கலந்துகொள்கிறார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 20: தமிழறிஞர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரின் 150 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வு, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 .30 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் விசாலாட்சி உணவக மண்டபத்தில்  வெகு சிறப்பாக  நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திரு தாயுமானவன் எழுதிய  தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச்சுவடுகள் எனும் நூலும் வெளியீடு காண்கிறது.

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் நடைபெறும் இந்நிகழ்வில், ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை மேற்கொண்டு, நூலினை வெளியீடு செய்து வைக்கிறார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Maraimalai Ilakkuvanar

விழா சிறப்புற வாழ்த்துகிறேன். தமிழ்க்காப்பு,தமிழ் மறுமலர்ச்சி என்பவை அடிகளார் என்னும் தங்கநாணயத்தின் இரண்டு பக்கங்கள்.மலேசியத் தமிழர்கள் இவ்விரு துறைகளிலும் தொடர்ந்து தொண்டாற்றுமாறு வேண்டுகிறேன்.

சோ.வீ.தமிழ்மறையான்

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் 150ஆம் ஆண்டு தமிழ்போற்றும்நிகழ்ச்சி நிரலை தவறவிட்டு வருந்துகிறேன்.