மெஸ்சிக்கு அர்ஜென்டினா கால்பந்தின் சிறப்பு மரியாதை
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
பியூனஸ் அயர்ஸ், செப். 4 –
அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக லயனல் மெஸ்சி அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்த அர்ஜென்டினா கால்பந்து சங்கம் புதிய ஏற்பாட்டை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த வார இறுதியில் அர்ஜென்டினாவில் நடைபெறும் அனைத்து கால்பந்து போட்டிகளும் ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்தில் ஒரு நிமிடத்திற்கு நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மெஸ்சிக்காகக் கைதட்ட உள்ளனர்.
39 வயதான மெஸ்சி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய காலம் முழுவதும் பெரும்பாலும் 10-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்கினார். இதனால் 10 என்ற எண் மெஸ்சியின் அடையாளமாகவே மாறியுள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெறும் அனைத்து தரப்பிலான போட்டிகளிலும் இந்த மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



