அர்ஜென்டினா ஈகுவடாரிடம் 1-0 என அதிர்ச்சி தோல்வி

top-news

குவடார், செப். 11-

செய்தி-வெற்றி மைந்தன்

2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, குவடாரின் எஸ்டாடியோ மானுமென்டல் பான்கோ பிச்சின்சா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதி கூடுதல் நேரத்தில் (45+13ஆவது நிமிடம்) என்னர் வலென்சியா அடித்த பெனால்டி கோல் மூலம் ஈகுவடார் வெற்றி பெற்றது.

இந்த ஒரே கோல், நீண்ட நேர வார் மதிப்பாய்வுக்குப் பிறகு கிடைத்தது. நிக்கோலாஸ் தாக்லியாபிகோ, ஆஞ்சலோ பிரெசியாடோவை தவறாகத் தடுத்ததாக மதிப்பாய்வில் உறுதியானது. வலென்சியா, குவடாருக்காக தனது 100ஆவது போட்டியில் விளையாடி, பெனால்டியைத் துல்லியமாக முடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அர்ஜென்டினா 31ஆவது நிமிடத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. நிக்கோலாஸ் ஓட்டமென்டி, கடைசி பாதுகாவலராக இருந்து வலென்சியாவை தவறாகத் தடுத்ததற்காக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அர்ஜென்டினா அணி 10 வீரர்களுடன் மீதமுள்ள ஆட்டத்தை தொடர்ந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *