ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து பாரிசான் விலகும்! - ஜாஹிட்

top-news

கோலாலம்பூர், செப் 28: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் 'பாரிசான் நேஷனல்' (Barisan Nasional) கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகும் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத்  ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதுவரை இந்தக் கூட்டணியில் பாரிசான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தருணத்தில், நாங்கள் அந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம்.

அது மாட்சிமை தங்கிய  மாமன்னரிடம் தாங்கள் அளித்த வாக்குறுதி அது. ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்தபோது  மேற்கொண்ட உறுதிமொழி அது என்று மலேசியா மக்கள் சக்தி கட்சியின் 18-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரையில் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ம.சீ.ச துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் மற்றும் பிற உறுப்புக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் பங்கேற்பது என்பது அதன் அரசியல் அடையாளத்தையோ அல்லது நிலைப்பாடுகளையோ விட்டுக்கொடுப்பதாக அர்த்தமல்ல என்று அஹ்மத் சாஹித் கூறினார்.

பாரிசான் எப்போதும் பாரிசானாகவே இருக்கும், என்று அவர் குறிப்பிட்டார்.

எங்கள் ஒப்பந்தம் தேசிய அளவிலானது. அந்த கொள்கையை எங்களால் நிலைநிறுத்த முடியும் என்பதை சமீபத்திய மாநிலத் தேர்தல்கள் காட்டின.

மாநில அளவில் நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடவும், வெவ்வேறு அரசியல் கூட்டணிகளைக் கொண்டிருக்கவும் முடியும் என்று தெதிவித்தார்.

முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து கூடிய விரைவில் வெளியேறுமாறு பாரிசானை மலேசியா மக்கள் சக்தி கட்சி வலியுறுத்தியிருந்தது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *