திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் சங்கர் உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளில், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழு, பல்வேறு விளையாட்டுகளில் வீரர்களின் சாதனைகளை ஆய்வு செய்து விருதுக்கான பரிந்துரைகளை வழங்கியது.

கடந்த ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் மற்றும் சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் டெக்கத்லானில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கர் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பேட்மிண்டன் வீராங்கனைகள் திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த், குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், செஸ் வீரர் விதித் குஜராத்தி, தடகள வீரர் முகமது அஜ்மல், நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி உள்ளிட்டோரும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *