தாவாவ்வில் அதிகாலை விபத்து! மூவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, ஜூலை 3: தாவாவ் மாவட்டத்தில் உள்ள Kalabakan சாலையில் அதிகாலை நடந்த விபத்தில் 3 aada காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் சபா சாஃப்ட்வுட் தொழிற்சாலைக்கு அருகே அவர்களின் வாகனம் எண்ணெய் டேங்கரின் பின்புறத்தில் மோதியது.

மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பொதுமக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஆடவரை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *