சூடானில் ஆயுதக்குழுவினர் தாக்குதல்: 4 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி

top-news
FREE WEBSITE AD

கார்டூம்: சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

சூடானில் கடந்த 2023 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதனுடன் பல்வேறு ஆயுதக்குழுக்களும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள குவார்டாட் மற்றும் அபு ஹமாமா கிராமங்களுக்குள் ஆயுதக்குழுவினர் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துணை ராணுவத்தின் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சம்பவப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பை பலப்படுத்த ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *