RTM தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் S.Arokiasamy காலமானார்!

top-news
FREE WEBSITE AD

நாட்டின் மூத்த செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரான Arokiasamy Savarimuthu கடந்த 2 அக்தோபர் அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழ் மீதான மிகுந்த ஆர்வத்தால் தமிழ்ச் சார்ந்த நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகத் திகழ்ந்து அதன் பின்னர் RTM வானொலியில் பணியாற்றும் வாய்ப்பை 1960 ஆண்டுத் தொடங்கினார். செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் RTM தமிழ்ச் செய்திப்பிரிவில் 1990 ஆம் ஆண்டு  வரையில் பணியாற்றினார். RTM தமிழ் நாடகங்களை அரங்கேற்றியும் வந்தார். தமது பணி ஓய்வுக்குப் பின்னரும் RTM தமிழ்ச் செய்திப்பிரிவில் ஒப்பந்த செய்தி தொகுப்பாளராகப் பணியாற்றியும் வந்துள்ளார்.

89 வயதான அவர் நேற்று அதிகாலை இயற்கை எய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் தமிழ்ச்செய்தி வாசிப்பாளர்களில் முக்கியமானவராகவும் தமது வாழ்நாளின் பாதியைச் செய்திகளுக்காக அர்பணித்தவருமாக அவர் கருதப்படுகிறார். சுமார் 40 ஆண்டுகளாகச் செய்தித் துறையில் பணியாற்றிய ஒரே தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரின் மகளான Priscilla Priya Arokiasamy, தந்தை வழியில் RTM தமிழ்ச் செய்தி வாசிப்பாளராகத் தற்போதும் மிளிர்கிறார். தமிழ்ச் செய்தியாளர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் பெரும் மதிப்பிற்குரியவராகவும் Arokiasamy Savarimuthu மனதில் வாழ்வார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *