போதையில் கவிழ்ந்த கார்! மாணவி அநியாய பலி

top-news

சுபாங் ஜெயா, அக். 7: சுபாங் ஜெயா, நியூ பந்தாய் விரைவுச்சாலையில் (NPE) ஏற்பட்ட விபத்தில் மாலத்தீவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 'இ-ஹெய்லிங்' (e-hailing) வாகன ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெத்தமைன் (methamphetamine) இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.48 மணியளவில் PJS சுங்கச்சாவடிக்கு அருகில், 37 வயதுடைய அந்த ஓட்டுநர் ஓட்டிச் சென்ற 'பெரோடுவா அட்டிவா' (Perodua Ativa) கார், 'புரோட்டான் S70' (Proton S70) காருடன் மோதியது. அப்போது அந்த ஓட்டுநரின் வாகனத்தில் மாலத்தீவைச் சேர்ந்த இரு பெண்கள் பயணித்துக் கொண்டிருந்ததாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மமாட் தெரிவித்தார்.

மோதலின் தாக்கத்தால் 'அட்டிவா' கார் சுழன்று சாலையின் நடுவே கவிழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.

பயணிகளில் ஒருவர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்; மற்றொருவர் காயமடைந்தார் என்று வான் அஸ்லான் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் அந்த ஓட்டுநரை நான்கு நாட்கள் காவலில் வைக்க ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

22 வயதான அந்த இரு பெண்களும் கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) உள்ள ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *