சபாவில் மீண்டும் நில நடுக்கம்!
- Shan Siva
- 07 Oct, 2026
கோலாலம்பூர், அக் 7: சபா மாநிலத்தின் சண்டகான் (Sandakan) கடல் பகுதியில் நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், இந்த நிலநடுக்கம் இரவு 9.11 மணியளவில் லஹாட் டத்து (Lahad Datu) பகுதிக்குக் கிழக்கே சுமார் 48 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியது.
சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வானிலை ஆய்வு மையம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அது மேலும் தெரிவித்தது.
செப்டம்பர் 26 அன்று குவாமுட்டில் (Kuamut) ஏற்பட்ட 3.3 அளவுள்ள நிலநடுக்கம் மற்றும் மூன்று நாட்களுக்கு முன்பு ரானா (Ranau) பகுதியில் ஏற்பட்ட 3.5 அளவுள்ள நிலநடுக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் சபாவில் பதிவாகியுள்ள தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

