சீனாவில் நிலநடுக்கம் 11 பேர் காயம் வீடுகள் சேதம்!
- Muthu Kumar
- 28 Sep, 2025
சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், பதினேழு வீடுகள் இடிந்து விழுந்தன. 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன. லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் 7,800 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



