மலேசியாவில் ‘கருடன்’ திரைப்பட அறிமுக விழா! நடிகர் சூரி பங்கேற்பு!

top-news
FREE WEBSITE AD

(எம்.முருகன்)

இயக்குநர் வெற்றிமாறன் கதையமைப்பில்,  அவரின் உதவி இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி, சசிகுமார், உன்னிமுகுந்தன், சூரி நடித்திருக்கும் கருடன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடல் மற்றும் அறிமுக விழா இன்று தலைநகரில் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அன்னலக்‌ஷ்மி  உணவகத்தில் நடைபெற்றது.

நடிகர் சூரி இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். “இயக்குநர் வெற்றிமாறன்  அவர்களின் கதையின் நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் சசிகுமார் அண்ணனுடன் நடிப்பது பெருமை என்று குறிப்பிட்ட அவர், படத்தை வெற்றிபெறச் செய்யுமாறு மலேசிய ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

வித்தியாசமான கதையமைப்பில் வந்திருக்கும் இந்தப் படம் நிச்சயம் மக்களைக் கவரும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் மலேசிய மக்களுக்கும், இப்படத்தை மலேசியாவில் வெளியிடும் நிறுவனங்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வரும் மே 31 ஆம் தேதி மலேசியாவின் அனைத்து திரையங்குகளிலும் இப்படத்தை 3 Dot மூவீஸ் மற்றும் எக்ஸ் ஜென் வெளியீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *