நெகிரி செம்பிலானில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஏக்கர் நிலம்! நீலாய் அருள்குமார்!

top-news

ஜூலை 27,

கடந்த 2023 நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானுடன் ஒன்றிணைந்து பாரிசான் 14 சட்டமன்றங்களில் வெற்றி பெற்றாலும் கடந்த மாதம் மாநில அரசாங்கத்திலிருந்து பாரிசான் விலகியதாலே இப்போது நெகிரி செம்பிலானில் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை பக்காத்தான் மட்டுமே போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க வேண்டும் என நீலாய் சட்டமன்றப் பக்காத்தான் வேட்பாளரான Arul Kumar Jambunathan வலியுறுத்தினார். 

60 ஆண்டுகள் பாரிசான் ஆட்சியை விடவும் கடந்த 8 ஆண்டுகளாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும் Arul Kumar Jambunathan தெரிவித்தார். குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளின் மூலமாக நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு 19.1 பில்லியன் ரிங்கிட் முதலீடுகள் கிடைத்ததையும் Arul Kumar Jambunathan சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு RM1,500 ரிங்கிட் வரையில் உதவி நிதி, 70 வயதுக்கு மேலானவர்களுக்கு RM200 ரிங்கிட் உதவி நிதி, கடந்த ஆண்டில் மட்டுமே பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருப்பதாக Arul Kumar Jambunathan தெரிவித்தார். 

தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டதாகவும் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் முழு நிதியுடன் லாபுவில் புதிய தமிழ்ப்பள்ளிக்கான தொடக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஏக்கர்கள் வரையில் மாநில அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் முதற்கட்டமாக 3 தமிழ்ப்பள்ளிகள் இந்த நிலங்களைப் பெற்றிருப்பதாகவும் நீலாய் சட்டமன்றப் பக்காத்தான் வேட்பாளரான Arul Kumar Jambunathan தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *