அம்னோ மாநாட்டில் பாஸ்! - தக்கியுதீன் உறுதி
- Shan Siva
- 01 Sep, 2026
கோத்தா பாரு, செப் 1: செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கும் அம்னோ பேராளர் மாநாட்டில் கலந்துகொள்ள அம்னோவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதை பாஸ் கட்சி உறுதி செய்துள்ளது. பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசானும், தானும் அந்தச் சபையில் கலந்துகொள்பவர்களில் ஒருவராக இருப்பேன் என்பதை உறுதிப்படுத்தினார்.
பாஸ் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மேலும் இரண்டு தலைவர்களுக்கு முகவரியிடப்பட்ட அழைப்புக் கடிதத்தை தாம் இன்று பெற்றதாக அவர் கூறினார்.
தாங்கள் கலந்துகொள்வதை உறுதி செய்வதாகவும், மேலும் தனிப்பட்ட முறையில் தாம் கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்தார். தலைவரால் கலந்துகொள்ள முடியாவிட்டால், நாங்கள் ஒரு பிரதிநிதியை அனுப்புவோம். மற்ற இரண்டு தலைவர்களைப் பொறுத்தவரை, நாங்கள் பின்னர் முடிவு செய்வோம் என்று கூறினார்.
பாஸ் கட்சி அம்னோ கூட்டத்த கலந்துகொள்வது இது முதல் முறையல்ல, ஏனெனில் நாங்கள் 2019-லும் கலந்துகொண்டோம் என்று அவர் கூறினார்.
பெங்காலான் செப்பாவில் உள்ள கிளந்தான் இஸ்லாமிய தர்பியா மையத்தில் 72-வது பாஸ் முக்தமாருக்கான ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
2026 ஆம் ஆண்டு அம்னோ பேராளர் மாநாடு, செப்டம்பர் 9 முதல் 12 வரை நான்கு நாட்கள் நடைபெறும்.
செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் நாள், அம்னோ தலைவரின் விளக்கவுரையுடன் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி அம்னோ மாநாடுகள் தொடங்கும் என்றும் அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ அஷ்ரஃப் வாஜ்தி துசுகி முன்னதாகத் தெரிவித்தார். செப்டம்பர் 10 ஆம் தேதி, மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகளுக்கான தனிப்பட்ட மாநாடுகள் தொடரும் என்று தெரிவிகப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



