ஆசிய விளையாட்டு: குராஷ், குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள் உறுதி

top-news

நகோயா: ஐச்சி–நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், குராஷ் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

பெண்களுக்கான 78 கிலோ குராஷ் எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிங்கி பல்ஹாரா, தென் கொரியாவின் மோ சுமினை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் பிங்கி தோல்வியடைந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இதனிடையே, பெண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், தென் கொரியாவின் சியோங் சுயெனை எதிர்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.

அதேபோல் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில், இந்திய வீராங்கனை பிரியா, சமாதோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவரும் இந்தியாவுக்கான மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *