அஸ்டன் வில்லா 3-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாமை வீழ்த்தியது

top-news

பர்மிங்காம், செப். 30-

செய்தி-வெற்றி மைந்தன்

ஸ்டன் வில்லாவின் ஒல்லி வாட்கின்ஸ் தனது கோல் வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். புல்ஹாமுக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இந்த பிரீமியர் லீக் சீசனில் ஸ்டன் வில்லா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிக்கு முன்னேறிய இந்த அணி, இந்த சீசனில் முதல் ஐந்து லீக் போட்டிகளில் வெறும் மூன்று புள்ளிகளைப் பெற்றது. உனை எமரி பயிற்சியாளராக வழிநடத்தும் இந்த அணி, ஆட்டத்தின் தொடக்கத்தில் மோசமாக விளையாடியது. மூன்றாவது நிமிடத்தில், சாசா லூகிக் அளித்த கார்னர் கிக்கிலிருந்து ரவுல் ஜிமெனெஸ் தலையால் கோல் அடித்தார்.

புல்ஹாம் அணிக்கு அரை மணி நேரத்தில் இரண்டு பெனால்டிகள் மறுக்கப்பட்டதால், அவர்களால் தங்கள் முன்னிலையை அதிகரிக்க முடியவில்லை. வாட்கின்ஸின் நீண்டகால கோல் வறட்சி, வில்லாவின் மெதுவான தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. இங்கிலாந்து அனைத்துலக வீரரான அவர், போலோக்னாவுக்கு எதிரான 1-0 யூரோப்பா லீக் வெற்றியில் பெனால்டியை மாற்றத் தவறினார்.

எனினும், முதல் பாதி முடிவதற்கு முன், வாட்கின்ஸ் பெர்ன்ட் லெனோவை வீழ்த்தி கோல் அடித்து, தனது 11 போட்டிகளாக நீடித்த வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இரண்டாவது பாதியில் வில்லா ஆதிக்கம் செலுத்தியது. ஜான் மெக்ஜின் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து அபாரமாக கோல் அடித்து முன்னிலை பெற்றார். பின்னர், வாட்கின்ஸ் எமி புவென்டியாவுக்கு அளித்த குறுக்கு பந்து மூன்றாவது கோலாக மாறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *