ஜிம்பாப்வேயில் சோகம்: கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி; 27 பேர் மாயம்
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
ஹராரே, ஆக. 12-
ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களில் 77 பேர் இதுவரை மீட்கப்பட்டு, அருகிலுள்ள ஒரு தீவுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜிம்பாப்வே சிவில் பாதுகாப்புப் பிரிவின் தகவலின்படி, படகில் குறைந்தது 114 வயது வந்த பயணிகளும் ஐந்து பணியாளர்களும் இருந்ததாக பயணச்சீட்டு பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தனர் என்பது தெரியவில்லை.
90 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட அந்தப் படகில், அதைவிட அதிகமானோர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த அலைகள் காரணமாக படகு கவிழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



