பினாங்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்தை - மகள் கொலை!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, நவம்பர் 8: நேற்று பிற்பகல் பினாங்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் லாபியில் ஓர் ஆணும் அவரது மகளும் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயர் ஈத்தாம் பண்டார் பாரு ஃபார்லிமில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் ஒரு நபர் செயல்பட்டது குறித்து முதலில் தகவல் கிடைத்ததாக பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அஹ்மத் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடுக்குமாடி கட்டிடத்தின் லாபியின் தரையில், லிப்ட் அருகே இரத்த வெள்ளத்தில் மூன்று உடல்களை கண்டனர்.
சம்பவ இடத்திலேயே 62 வயதுடைய நபரும் அவரது 30 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபர் என நம்பப்படும் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டதால் காயமடைந்த சந்தேக நபர், சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *