ஆர்க்டிக் பொது பூப்பந்து இறுதிப் போட்டியில் தேசிய மகளிர் இணைக்கு வெள்ளிப் பதக்கம்!

top-news

வண்டா, அக்.15-

ஆர்க்டிக் பொது பூப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தேசிய மகளிர் இரட்டையர்களான பெர்லி தான் - எம்.தினா இணை சீனாவின் லூ செங்சு-டான் நிங் இணையிடம் தோல்வியடைந்தது.

பின்லாந்தின் வண்டாவில் அமைந்துள்ள எனெர்ஜியா அரேனாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெர்லி தான்-எம்.தினா இணை 12-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் சீன இணையிடம் வீழ்ந்தது.இதன் மூலம் தேசிய மகளிர் இணைக்கு வெள்ளிப் பதக்கமே சொந்தமானது.

ஜனவரியில் மலேசியப் பொது பூப்பந்து போட்டி, இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி, ஜப்பான் பொது பூப்பந்து போட்டி ஆகிய பட்டங்களை சீனாவின் லூ செங்சு-டான் நிங் இணை தற்போது ஆர்க்டிக் பொது பூப்பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை தங்கள் வசமாக்கியது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *