மொட்டைக் கடிதங்களால் தேசிய முன்னணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது - அமாட் ஸாஹிட் ஹமிடி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 25-

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான மொட்டைக் கடிதங்கள் வெளியாகியுள்ளன.அத்தொகுதியில் உள்ள சீன வாக்காளர்கள் அத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்குமாறு அக்கடிதங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், அந்த மொட்டைக் கடிதங்களால் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அத்தொகுதியில் சீன வாக்காளர்கள் கணிசமாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாக்களிக்க வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குப் பதிவு மையத்திற்குக் கொண்டுவர ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *