ஃபத்லினா பாஸ் கட்சியின் கல்வி அமைச்சர் அல்ல! - லிம் குவான் எங் சாடல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 27: டிஏபி தலைவர் லிம் குவான் எங், தாய்மொழிப் பள்ளிகளுக்கு மதுபான ஆலைகள் மூலம் நிதி திரட்டுவது தொடர்பான பிரச்சினையில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்கைக் கடுமையாக சாடியுள்ளார்.

பாகான் எம்.பி.யான லிம், ஃபத்லினா ஒற்றுமை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்றும், பாஸ் சொல்வதை மட்டும் கேட்கக்கூடாது என்றும் கூறினார்.

ஃபத்லினா கடந்த முறை கடுமையாகப் பேசியிருந்தாலும், அவர் ஒரு ‘பாஸ் கல்வி அமைச்சர்’ அல்ல என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அவர் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார் என்று நம்புகிறேன் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சீனப் பள்ளி ஒன்றின் நிதி சேகரிப்பில், மதுபான நிறுவனம் ஒன்றுப் RM3 மில்லியனுக்கான நன்கொடை வழங்கியது  குறித்து பாஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

சிலாங்கூர் PAS  கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சுக்ரி ஓமர், ஒரு மண்டபம் கட்ட நிதி திரட்டும் பள்ளியின் முயற்சி பாராட்டுக்குரியது, ஆனால், மதுபான நிறுவனத்தின் பங்கேற்பால் அது களங்கம் அடைந்ததாகக் கூறினார். மேலும் இது பள்ளிகளில் மதுவை இயல்பாக்குவதற்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து,கல்வி அமைச்சும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறியது. மேலும் சூதாட்டம் மற்றும் புகையிலை, போதைப்பொருள் மற்றும் மது விற்பனை போன்ற நடவடிக்கைகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை தடைசெய்யும் தற்போதைய வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு பள்ளிகளுக்கு  கல்வி அமைச்சு நினைவூட்டியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *