2024 பாரா சுக்மா போட்டியின் முதல் தங்கத்தை ஜொகூரின் பட்ரூல் ஹிசாம் வென்றார்!

top-news

கூச்சிங், செப். 25-

2024 பாரா சுக்மா போட்டியின் முதல் தங்கம் ஜொகூர் மாநிலத்திற்கு சொந்தமானது.குண்டு எறிதல் விளையாட்டின் பார்வை குறைபாடு பிரிவில் ஜொகூரின் திடல்தட வீரர் பட்ரூல் ஹிசாம் முசா தங்கம் வென்று அம்மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், தேசிய அடைவுநிலையை புதுபித்து 31 வயதுடைய பட்ரூல் புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.இதற்கு முன்னர் கலந்து கொண்ட மூன்று சுக்மா போட்டிகளிலும், முதல் நாளிலேயே பட்ரூல் தமது சொந்த அடைவுநிலையை புதுப்பித்துள்ளார்.

இவ்வாண்டு முதல் முயற்சியிலேயே 11.36 மீட்டர் பதிவு செய்து 2022ஆம் ஆண்டில் தாம் பதிவு செய்த 9.70 மீட்டரை தானே முறியடித்தார்.அதனை தொடர்ந்து, ஐந்தாவது முயற்சியில் 11.85 மீட்டர் பதிவு செய்து, ஜொகூர் மாநிலத்திற்கான முதல் தங்கப்பதக்கத்தை பட்ரூல் வென்றிருக்கிறார்.

8.98 மீட்டர் பதிவு செய்த முஹ்மட் பிர்டாவுஸ் நாதிமான் மூலம், வெள்ளிப்பதக்கமும் ஜொகூர் மாநிலத்திற்கே சொந்தமான நிலையில் உபசரணை மாநிலத்தின் ஹவிஸ் புய்னி 5.22 மீட்டர் பதிவு செய்து வெண்கலம் வென்றார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *