‘கோவில் சொத்துகளை அபகரிக்க விடக்கூடாது’ – அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடும் உத்தரவு
- Surendran Sumdraraj
- 25 Jul, 2026
தமிழ் நாடு, ஜூலை 25-
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம் மற்றும் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கோவில்களில் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், கோவில் சொத்துகளை அபகரிக்கும் எந்தவித முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவில் நிலங்கள் அல்லது பிற சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து துறை ஆணையரின் கவனத்திற்கும் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



