பத்து ஃபெரிங்கியில் தீ விபத்து! - 32 கடற்கரை கடைகள் நாசம்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜூலை 29:  பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் கடற்கரையோர ஹாக்கர் மையத்தில் நேற்று  மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 32 கடைகள் எரிந்து நாசமாகின. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கோல்டன் சாண்ட்ஸ் ஹோட்டலுக்கு அடுத்துள்ள ஹூமா ஹவுஸ் ஹாக்கர் மையத்தில் பிற்பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

பாகான் ஜெர்மல் மற்றும் தெலுக் பஹாங்கில் இருந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் மாலை  6 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தினால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *