தாம் எதையும் மூடி மறைக்கப் போவதில்லை- டத்தோ ஹஜிஜி நோர்!
- Muthu Kumar
- 13 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 13
ஒரு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில், லஞ்சம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தில் சபா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தாம் எதையும் மூடி மறைக்கப் போவதில்லை என்று. மாநில முதலமைச்சர் டத்தோ ஹஜிஜி நோர் கூறியுள்ளார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பிலான, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு காபுங்ஙான் ரக்யாட் சபா தலைமையிலான மாநில அரசாங்கம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்."இச்சம்பவத்தை விசாரிக்குமாறு அதிகாரத் தரப்பை (எம்ஏசிசி) நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எங்களின் ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் அதோடு, லஞ்சம் கொடுத்தவர்களையும் அது (எம்ஏசிசி) விசாரிக்க வேண்டும்.அரசாங்கத்திடமிருந்து சிலவற்றைப் பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்தவர்கள் தீய எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர்.
அதைப் பெறுவதில் அவர்கள் அந்த குரல் பதிவு ஒரு வெறும் குற்றச்சாட்டுதான். இதில் மூடிமறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை என்று. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு குரல் பதிவை குறிப்பிட்டு ஹஜிஜி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில், அதிகாரிகளுக்கு 17 வினாடிகள் கொண்ட குரல் பதிவை இயக்கிக் காட்டிய ஒரு வழக்கறிஞரை எம்ஏசிசி அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
'இதில் மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. சபா அரசாங்கம் நல்ல நிலையில் இருப்பதுடன் சிறப்பாகச் செயல்பட்டும் வருகிறது. இதன் தொடர்பிலான ஆதாரங்களை வழங்க தமது கட்சிக்காரர் தயாராக இருப்பதாக, அந்த வழக்கறிஞர் கூறியதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தோல்வியுற்ற பின்னர், இத்தகைய விஷயங்கள் வெளிப்படுகின்றன.அந்த குரல் பதிவு ஒரு வெறும் குற்றச்சாட்டுதான்.
இதன் தொடர்பிலான ஆதாரங்களை வழங்க தமது கட்சிக்காரர் தயாராக இருப்பதாக, அந்த வழக்கறிஞர் கூறியதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார். அதோடு, தமது கட்சிக்காரர் விசாரணைக்கு உட்படமாட்டார் என்ற ஓர் உடன்பாடு காணப்பட வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியதாக அஸாம் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு குறித்த முழுமையான தகவல்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைக்கான ஓர் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எம்ஏசிசியினால் வழங்க முடியாது என்ற காரணத்தினால், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அஸாம் கூறினார்.
2010ஆம் ஆண்டு தகவலளிப்பாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தம்மால் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதால், ஓர் அதிகாரப்பூர்வ புகாரை செய்யுமாறு அந்த சாட்சி வலியுறுத்தப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். தாம் அவ்வாறு கூறிய பின்னர் அந்நபர், எம்ஏசிசியில் புகார் செய்வதற்கு முன்னர் தமக்கான பாதுகாப்புக்கு ஓர் உத்தரவாதம் அளிக்குமாறு கோரும் ஒரு கடிதத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில், சபா மாநிலத்தின் “உயர்மட்டத் தலைவர்' உட்பட மொத்தம் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக, அந்நபர் கூறியதாக தகவல்கள் தெரிவித்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *