டத்தோ மந்திரிபெசார் கவலைப்பட வேண்டாம்; நான் இருக்கிறேன்! - சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் அன்பொழுகப் பேசிய அஸ்மின் அலி

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆக 10: இன்றைய சிலாங்கூர் சட்டமன்ற விவாதத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ  முகமது அஸ்மின் அலி மாநில அரசிடம் காட்டிய மென்மையான அணுகுமுறை சபையின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தின் போது, ​​முகமது அஸ்மின், தனது வழக்கமான கடுமையான தாக்குதல்களுக்குப் பதிலாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரியை அமைதியானவர் என்று அழைத்ததால், அமர்வு மேலும் களைகட்டியது.

மாநில அரசுக்குச் சாதகமாகத் தோன்றிய, அவரது விவாதத்தின் இந்த நட்பான முடிவு, சபையினருக்கு வேடிக்கையாக இருந்தது மட்டுமல்லாமல்,  செய்தியாளர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

எதிர்காலத்தில் ஒரு சிறந்த சிலாங்கூரை உருவாக்குவோம். மாநிலம் செழிக்கவும், அதன் மக்கள் வளம் பெறவும் வாழ்த்துகிறோம். நாம் ஒன்றுபட்ட சிலாங்கூர் மக்கள்  என்று விவாதத்தின் போது அஸ்மின் கூறினார்.

முன்னதாக தனது உரையில், அரசியல் சூழல் மேலும் மேலும் பைத்தியக்காரத்தனமாக மாறி வருவதாகக் கூறிய அஸ்மின், ஊழல் ஆட்சியை நியாயப்படுத்த முயன்ற குழுக்களை விமர்சித்தார்.

மலாய் ஒற்றுமையின் பெயரில் இது மக்களை முட்டாளாக்கும் ஒரு செயல்முறை.  மலாய்காரர்கள் இப்போது பிளவுபட்டுள்ளனர். அவர்கள் பிளவுபடும்போது,  தங்கள் சொந்தப் பொய்களை மறைக்க அத்தகைய அரசியல் பேர்வழிகள் மற்ற இனங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்.

டத்தோ மந்திரி பெசார், கவலைப்பட வேண்டாம். இந்த சித்தாந்தம் சிலாங்கூரில் வேரூன்ற அனுமதிக்காதீர்கள். சிலாங்கூரை மேம்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். நீங்கள் தனியாக இல்லை. நான் எப்போதும் சிலாங்கூருக்காக இருக்கிறேன் என்று அஸ்மின் கூறினார்.

சிலாங்கூர், ஆக்கப்பூர்வமான ஒற்றுமையின் பெயரில் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும்; மக்களுக்கும் நாட்டிற்கும் அழிவைக் கொண்டுவரும் பொய்கள், தவறான சித்தாந்தங்கள் மற்றும் பாசாங்குத்தனம் நிறைந்த ஒற்றுமையின் பெயரில் அல்ல  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *