அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து, இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் மகள், சினிமாவில் நடிகையாகியுள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த நடிகை யார் தெரியுமா?

அந்த நடிகை தேஜாலட்சுமி. இவர் நடிகை ஊர்வசியின் மகள்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன், சத்யராஜ், அர்ஜூன், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஊர்வசி தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.




இவர் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான அப்பத்தா என்ற படம் அவர் நடித்த 700-வது திரைப்படமாகும். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ஊர்வசி, சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். ஊர்வசி கடந்த 2000-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தேஜலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

அன்புடன் 'குஞ்சட்டா' என்று அழைக்கப்படும் தேஜா லட்சுமிக்கு 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா', என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தேஜாலட்சுமி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேஜாலட்சுமியின் புதிய புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. பிளாக் அண்ட் ஒயிட் நிழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தேஜாலட்சுமி மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படங்களில் தேஜாலட்சுமி பார்ப்பதற்கு ஆங்காங்கே பழைய காலத்து (Vintage) நடிகை ஊர்வசியை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 80-களில் பார்த்த ஊர்வசியைப் போலவே இருக்கிறார்" என்றும், "அந்த விண்டேஜ் லுக் இவருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது" என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *