ஆஸ்திரியா 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பைக்குத் தகுதி!

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

வியன்னா, நவ. 19-

ஆஸ்திரியா அணி இன்று அதிகாலை போஸ்னியா ஹெர்செகோவினாவுடன் 1-1 என சமநிலை பெற்றாலும், குரூப் எச்-யில் முதலிடம் உறுதி செய்து 2026 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

1998-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் கால் பதிக்கும் ஆஸ்திரியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்படும் போட்டியில் பங்கேற்கும்.

போட்டியின் 12-ஆவது நிமிடத்திலேயே போஸ்னியா அதிர்ச்சி தந்தது. ஹரிஸ் தபாகோவிச் நெருக்கமான தூரத்தில் இருந்து தலையால் அடித்து கோலாக்கி அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆனால் 77-ஆவது நிமிடத்தில் மைக்கேல் கிரிகோரிட்ஸ் சமநிலை கோலை அடித்து ஆஸ்திரியாவுக்கு உயிர் ஊட்டினார். இந்த ஒரு புள்ளியே ஆஸ்திரியாவுக்குக் குரூப் சாம்பியன் பட்டத்தையும் உலகக் கோப்பை டிக்கெட்டையும் உறுதி செய்தது.

போஸ்னியா 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து, இரண்டு புள்ளிகள் பின்தங்கியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *