அன்வாரின் மனதைத் தொட்ட கவிதாவின் கதை! முகநூலில் அன்வார் நெகிழ்ச்சி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 20: தனது 5 பிள்ளைகளை வளர்ப்பதற்காக, அனைத்து காலநிலைகளிலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தெருத் துப்புரவுப் பணியாளர் எம். கவிதாவின் செயல், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மனதைத் தொட்டுள்ளது.

கவிதாவின் பல ஆண்டுகால கடின உழைப்பும் தியாகமும் பலனளித்துள்ளது என்றும், அவரது 5 பிள்ளைகளும் தத்தம் துறைகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கவிதா மற்றும் அனைத்து தெரு துடைப்பாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், நமது நல்வாழ்வைப் பாதுகாப்பதிலும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் நன்றி என்று அவர் கூறினார்.

நேற்று முன் தினம், SWCorp-இன் துப்புரவுப் பணியாளர்கள் தினப் பாராட்டு விழாவில், கவிதாவின் பங்களிப்புக்கு ஒரு சிறப்பு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

சிரம்பானில்  உள்ள SWM என்விரான்மென்ட் நிறுவனத்தில் பணிபுரியும் கவிதாவின் கதை, கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் பணியில் இருந்தபோது, ​​அவரது 50வது பிறந்தநாளைக் கொண்டாட அவரது 4 மகள்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது பலஇன் வரவேற்பைப் பெற்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *