தாவாவ் – 8 வீடுகளில் தீ!

top-news
FREE WEBSITE AD


தாவாவ், ஜூலை 17: ஜாலான் அபாஸ், பத்து 4, கம்போங் ஹிதாயத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் தீயில் எரிந்தன. இதில்  பெண் ஒருவரின் முகம் மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

31 வயதான பாதிக்கப்பட்ட பெண் தாவாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் தெரிவித்தார்.

 அதிகாலை 1.50 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 20 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

அதிகாலை 3.43 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முடிந்தது, மேல் நடவடிக்கை காலை 7.24 மணிக்கு முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் எட்டு வீடுகள் மற்றும் நான்கு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று ஜெமிஷின் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *