கொட்டாவி விட்டது ஒரு பிரச்சனையா!

top-news

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் 21 வயதான ஜென்னா சினாட்ரா  என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் தனக்கு நேர்ந்த ஒரு சோகமான சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில்  காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் தவித்துள்ளார்.

இதனால் அவருடைய வாய் திறந்த நிலையில் இருந்ததாகவும் அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் அவருடைய வாய் மீண்டும் சரியானதாக இந்த காணொளியில் கூறியுள்ளார்.

மேலும் கொட்டாவி விட்டதால் ஒரு பெண் வாயை மூட முடியாமல் தவித்தது நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]