நயன்தாரா: பியாண்ட் தி பெய்ரி டேல் பெயரில் நெட்பிளிக்ஸ் வெளியிடும் நயன்தாரா திருமண காணொளி!

top-news

முதன்முதலில் நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க கதை கேட்கும் போது விக்கியை சந்தித்த நயன்தாராவுக்கு முதல் சந்திப்பிலேயே அவர்மீது கிரஷ் வந்துவிட்டது.

பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இருப்பினும் வெளியே சொல்லாமல் இருவரும் சைலண்டாக காதலித்து வந்தனர். பின்னர் அரசல் புரசலாக செய்திகள் லீக் ஆனதும் விருது விழா ஒன்று விக்னேஷ் சிவன் உடன் ஜோடியாக வந்து, தங்கள் காதலை உறுதி செய்தார் நயன்தாரா.

இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஏனெனில் இந்த திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி, இருவரின் திருமண காணொளியை Nayanthara : Beyond the Fairy Tale என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது.

நயன்தாராவின் திருமணத்தை படமாக்கும் உரிமையை ரூ.25 கோடி செலவழித்து கைப்பற்றி இருக்கும் நெட்பிளிக்ஸ், இருவரின் திருமண காணொளி குறித்த டாக்குமென்ட்ரியின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த டிரெய்லரில், நயன்தாரா தனக்கு எதிரான விமர்சனம் குறித்து கூறி கதறி அழுதுள்ளார். அதில் ஸ்ரீராம ராஜ்யம் தான் உங்கள் கடைசி திரைப்படமா? அதற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு பிரபுதேவாவை திருமணம் செய்கிறீர்களா? என பல கேள்விகளுக்கு அவரே பதில் கூறியுள்ளார்.

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *