கே பின் ஜி ஜியாவின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்!

top-news
FREE WEBSITE AD

லீ ஜி ஜியாவின் அணியின் தலைமை பயிற்சியாளர் யோ கே பின் வரும் ஆண்டில் மற்ற வாய்ப்புகளைத் தொடர விரும்புவதால், அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளது.கே பின் அணிக்குள் ஒரு நல்ல பிணைப்பைக்  கொண்டிருந்தார், குறிப்பாக தேசிய ஆண்கள் ஒற்றையர் ஷட்லர் ஜி ஜியாவை ஆதரிப்பதில், பல காயங்களால் பாதிக்கப்பட்ட அவரை கவனித்து பயிற்சி வழங்கினார்.

கடந்த ஒரு வருடமாக என்னுடன் பயணித்த பயிற்சியாளர் கே பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், மேலும் பயிற்சியில் நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதைக் வெளிப்படுத்த குறைந்த வாய்ப்புகளே கிடைத்ததால் நான் விரக்தியடைந்துள்ளேன்."

அதனால்தான் பயிற்சியாளர் கே பின் தன் பொறுப்பிலிருந்து இருந்து வெளியேற விரும்புவதை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று ஜி ஜியா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில் அணியின் தலைமை பயிற்சியாளராக கே பின் நியமிக்கப்பட்டார்.

தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காவிட்டாலும், கே பின் ஜனவரி 6-11 வரை இங்குள்ள புக்கிட் ஜலீலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கில் நடைபெறவிருக்கும் 2026 மலேசியா ஓபனில் ஜி ஜியாவுடன் இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் தேசிய ஆண்கள் ஒற்றையர் வீரர் லியூ டேரன் பயிற்சியாளராக அணிக்குத் திரும்ப ஒப்புக்கொண்டதாக அணி LZJ அறிவித்தது. LZJ அணியின்  முன்னோடி உறுப்பினர்களில் ஒருவராக டேரனின் அந்தஸ்தை கருத்தில் கொண்டு, அவரது வருகையை வரவேற்கத்தக்க கூடுதலாக குழு விவரித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *