Azalina Othman அமைச்சராக இருக்க தகுதியற்றவர்! - Takiyuddin Hassan சாடல்!

top-news

நவம்பர் 11

நஜீப்பின் பொதுமன்னிப்பு, தண்டனை குறைப்புகளில் தமது பங்களிப்பு இல்லை என சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சரான Azalina Othman தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என பெரிக்காத்தான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Takiyuddin Hassan இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொது மன்னிப்பு வாரியம் இயங்குவது Azalina Othman அமைச்சராக இருக்கும் சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சின் கீழ் என்பதை அவர் அறிந்தும், அவரின் BOSS KU நஜீப்பைக் காப்பாற்ற அமைச்சர் பதவியைப் பயன்படுத்தியிருப்பதாக Takiyuddin Hassan குற்றம் சாட்டினார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது வதந்தி என தெரிவித்தை அடுத்த சில நாள்களிலேயே நஜீப்பிற்குப் பொது மன்னிப்பு வழங்க பொது மன்னிப்பு வாரியமான Lembaga Pengam’punan முடிவு செய்திருப்பது சந்தேகத்திற்குரியது என Takiyuddin Hassan வாதிட்டார். அமைச்சர் பொறுப்பைத் தன் BOSS KU’வைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்துவது குற்றம் என்பதை Azalina Othman அறிந்திருக்கவில்லை என Takiyuddin Hassan கடுமையாகச் சாடினார்.

Ahli Parlimen pembangkang menuntut penjelasan daripada Datuk Seri Azalina Othman Said atas dakwaan kenyataan mengelirukan mengenai sekretariat Lembaga Pengampunan. Takiyuddin Hassan mendakwa sekretariat tersebut di bawah BHEUU, bukan Kementerian Wilayah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *