கலப்பு இரட்டையர் பிரிவு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை: BAM

top-news

கோலாலம்பூர், ஆக. 5-

 மலேசிய பேட்மிண்டன் சங்கம் (BAM), தேசிய கலப்பு இரட்டையர் பிரிவு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நோவா விடியான்டோ விலகியதைத் தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்ப உயர்தர அனுபவம் கொண்ட உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

BAM பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ கூறுகையில், தற்போது பல்வேறு வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதில் வெளிநாட்டு அணிகளுடன் பணியாற்றி வரும் மலேசிய பயிற்சியாளர்களும் அடங்குவதாகத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தற்போது பணியாற்றி வரும் மலேசிய பயிற்சியாளர்களில் ஜெரமி கான் மற்றும் டான் பின் ஷென் ஆகியோர் ஹாங்காங் தேசிய அணியுடனும், டான் கிம் ஹெர் இந்திய அணியுடனும், லீ வான் வா ஜப்பான் அணியுடனும், சின் ஈ ஹுய் நியூசிலாந்தில் உள்ள ஒரு கிளப்புடனும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், ஜெரமி கான் மற்றும் சின் ஈ ஹுய் ஆகியோர் தற்போது தங்களது ஒப்பந்தங்களில் இருப்பதால், உடனடியாக BAM-க்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அணியின் கலப்பு இரட்டையர் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில், அனுபவம் வாய்ந்த மற்றும் சர்வதேச போட்டி அனுபவம் கொண்ட பயிற்சியாளரை நியமிக்க BAM முயற்சி செய்து வருகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *