ஒபாமா தம்பதி சர்ச்சை காணொளி பதிவு - மன்னிப்பு கேட்க மறுத்த ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை சா்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான காணொளிக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இருப்பினும், இந்தச் செயலுக்காக அவா் மன்னிப்பு கோர மறுத்துவிட்டாா்.

டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு காணொளியை பகிா்ந்திருந்தாா். 2020 அதிபா் தோ்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.
காணொளியின் இறுதியில், ஒபாமா தம்பதியினரை 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம் சா்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஆப்பிரிக்க வம்சாவளியினரை இழிவுபடுத்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியினா் மட்டுமின்றி, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், 'காணொளியை முழுமையாகப் பாா்க்காமல் எனது உதவியாளா் பதிவிட்டுவிட்டாா். தோ்தல் முறைகேடுகள் குறித்த விடியோ என்பதாலேயே அதைப் பகிா்ந்தேன். இறுதியில் அத்தகைய காட்சிகள் இருப்பது தெரியாது.

காணொளியில் உள்ள காட்சிகளைக் கண்டிக்கிறேன். ஆனால், இது ஒரு தவறுதலான செயல் என்பதால் மன்னிப்பு கேட்கமாட்டேன்' என்றாா்.முதலில், இந்த காணொளி சாதாரண 'மீம்' என்று வெள்ளை மாளிகை நியாயப்படுத்தியது. கடும் எதிா்ப்புக் கிளம்பவே, சுமாா் 12 மணி நேரத்துக்குப் பிறகு காணொளி பதிவு நீக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *