கட்டிடம் சரிந்ததில் ஒருவர் மரணம்! இருவர் படுகாயம்! – மலாக்காவில் சோகம்!

top-news

12 அக்தோபர்  

மலாக்காவில் உள்ள Jalan Bukit Senjuang சாலையில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் வெளிநாட்டுத் தொழிலாளர் ஒருவர் கான்கிரீட் தூண்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலை 6 மணியளவில் கட்டிடத்தின் தூண்கள் சரிந்ததில் மூவர் இடிபாடுகளில் சிக்கியதாகப் பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் 35 பேர் கொண்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். மாலை 6.40 முதல் 8.45 மணி வரையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இடிபாடுகளில் சிக்கியிருந்த 49 வயது Abbas Ghulam, 32 வயது Zubair Ahmed எனும் இரு பாக்கிஸ்தான் நாட்டினர்கள் மீட்கப்பட்டதாகவும் மற்றொரு வங்காளதேசத்தைச் சேர்ந்த 22 வயது Jidan நள்ளிரவு 12.16 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

18.3 மீட்டர் x 24.4 சதுர மீட்டர் அளவுள்ள கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து அவர்களை மீட்பதில் மீட்புப் படையினர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்

Seorang pekerja Bangladesh maut, dua warga Pakistan cedera dalam insiden bangunan runtuh di Melaka. Bomba berjaya menyelamatkan 2 mangsa yang terlibat dirawat di Hospital Melaka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *