வங்கித் துறை கடன் வளர்ச்சி அதிகரிக்கும் - ஆம் முதலீட்டு வங்கி நம்பிக்கை

top-news

கோலாலம்பூர், மே 8-
இந்த ஆண்டு இதுவரை 5.4 விழுக்காடாக இருந்த வங்கித் துறை கடன் வளர்ச்சியானது, 2024ஆம் ஆண்டிற்கான 4.0-5.0 விழுக்காடு வளர்ச்சி வரம்பிற்கு ஏற்ப உள்ளது என ஆம் முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடன் வளர்ச்சி மார்ச் 2024இல் ஆண்டுக்கு ஆண்டு 6.3 விழுக்காடக அதிகரித்துள்ளது. இது அடமானம், தனிநபர் கடன் பிரிவுகளுக்கான தொடர்ச்சியான வளர்ச்சியுடன் என்று அவர் கூறினார்.
மார்ச் 2024 இல் வீட்டுக்கடன் அல்லாத வளர்ச்சியும் பிப்ரவரி 2024 இல் 5.3 விழுக்காட்டில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு 5.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கி கூறியது. போக்குவரத்து, சேமிப்பு, தகவல் தொடர்பு, நிதி, காப்பீடு மற்றும் வணிகத் துறைகளுக்கான வலுவான நிதி நிலைகளின் பங்களிப்பு இது ஆகும்.
கடன் விண்ணப்பங்களுக்கான வேகம் மெதுவாகவே உள்ளது. ஆனால் மார்ச் 2024இல் வீட்டுக் கடன் அல்லாத அனுமதிகளுக்கு சிறந்த நிலைமைகளைக் காணும்.
மேலும், மார்ச் 2024இல் கடன் குறைபாடு மற்றும் ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதாக ஆம் முதலீட்டு வங்கி  தெரிவித்துள்ளது.
இந்தத் துறையில் ஒரு ‘நடுநிலை’ பரிந்துரையைப் பராமரிக்கிறது மற்றும் மே 9, 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள நாணயக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ஒரே இரவில் கொள்கை விகிதம் 3.0 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *