கனடாவுடன் போஸ்னியா சமநிலை

top-news

டொராண்டோ, ஜூன் 13 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் பி’ பிரிவு தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்ட போஸ்னியா-ஹெர்சகோவினா அணி, ஆட்டம் முழுவதும் மிகவும் தற்காப்பு பாணியில் விளையாடியதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் செர்கேய் பார்பரெஸ் ஒப்புக்கொண்டார்.

போட்டியின் முதல் பாதியில் போஸ்னியா அணியின் முன்னணி வீரர் ஜோவோ லூகிச் தலையால் அற்புதமாக கோல் அடித்து தனது முதல் சர்வதேச கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம் போஸ்னியா ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது.

எனினும், இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய கனடா, ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சைல் லாரின் அடித்த கோல் மூலம் சமநிலையை எட்டியது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *