பாரிசான் பெரிக்காத்தானால் குழப்பம்! சஞ்சீவன் சாடல்!

top-news

நவம்பர் 18,

நெகிரி செம்பிலான் நிலவு அரசியல் நிலைத்தன்மைக்குப் பாரிசானும் பெரிக்காத்தானும் தான் காரணம் என பெர்சாத்து இணைத் தலைவரான Datuk Sri Sanjeevan Ramakrishnan தெரிவித்துள்ளார். அரசியலில் ஏற்படும் நெருக்கடிகளை விடவும் அரசாங்கத்தில் ஏற்படும் நெருக்கடிகள் மக்களை நேரடியாகப் பாதிக்கும் என Datuk Sri Sanjeevan Ramakrishnan வலியுறுத்தினார். நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாரிசானும் பாஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தாலும் பல்வேறு நெருக்கடிகளால் இப்போது அதன் மெந்திரி பெசார் பதவி விலகியுள்ளார். இதனால் அரசுத் துறைகள் இயங்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என Datuk Sri Sanjeevan Ramakrishnan தெரிவித்தார். 

தேர்தலில் மக்கள் ஒரு பொறுப்பான நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கொள்கைகளையும் மாநில மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசு செயல்பட வேண்டும் என Datuk Sri Sanjeevan Ramakrishnan வலியுறுத்தினார். அரசியல் கட்சிகள் மக்கள் நலனை மறந்து, அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதால் பாரிசானின் நீலை அலையால் நெகிரி செம்பிலானில் குழப்பங்கள் மட்டுமே சூழ்ந்துள்ளது என Datuk Sri Sanjeevan Ramakrishnan தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்