தேர்தலில் பாரிசானுடன் பாஸ் கூட்டணி! HADI AWANG பேச்சுவார்த்தை!
- THINAGAREN SANGGAREN
- 13 Jul, 2026
ஜூலை 13,
அடுத்து நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஸ் கட்சியும் பாரிசானும் இணைந்து போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதை பாஸ் கட்சியின் தலைவர் TAN SRI ABDUL HADI AWANG ஒப்புக்கொண்டார். இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதகமான முன்னேற்றங்கள் தென்படுவதாகவும் பாஸ் தலைவர் TAN SRI ABDUL HADI AWANG குறிப்பிட்டார்.
முன்னதாக நெகிரி செம்பிலான் அரசாங்கத்தைக் கைப்பற்ற பாரிசானுடன் பாஸ் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அதன் பின்னர் BERSATU கட்சியுடன் ஏற்பட்ட உட்கட்சி சிக்கலால் மாநிலத்தைக் கைப்பற்றும் முயற்சி முறிந்ததாகவும் TAN SRI ABDUL HADI AWANG தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே நாம் இணைந்து செயல்பட இடமிருக்கிறது, தேர்தலை எதிர்கொள்வதற்கான கலந்துரையாடல் பாரிசான் பாஸ் கூட்டணியை அமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பாஸ் கட்சியின் தலைவர் TAN SRI ABDUL HADI AWANG தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



