பாரிசான் சின்னத்தைப் பயன்படுத்த பெரிக்காத்தானுக்கு அனுமதி இல்லை! அம்னோ உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 04 Oct, 2026
அக்தோபர் 4,
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் சின்னத்தைப் பயன்படுத்தும் உரிமை அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது என அம்னோ உதவித் தலைவர் Datuk Seri Mohamed Khaled Nordin நினைவூட்டினார். விருப்பம் போல எல்லா கட்சிகளும் பாரிசான் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார். குறிப்பாகப் பெரிக்காத்தான் வேட்பாளர் பாரிசான் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படாது என Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
பெரிக்காத்தானின்
வேட்பாளர்கள் பாரிசான் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதை வரவேற்கிறோம். ஆனால்
சின்னத்தை மற்ற கட்சியின் வேட்பாளருக்கு வழங்குவதால் பிரச்சாரத்தின் போது குழப்பங்கள்
ஏற்படும் என Datuk Seri
Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
எங்கள் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நாங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். ஆனால்
விருப்பம் போல நாங்கள் அழைக்கமாட்டோம் என அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

