பயர்ன் மியூனிக் – வுல்ஸ்பர்கை 8–1 கோல்கணக்கில் வென்றது

top-news

மியூனிக், ஜன. 12-

குளிர்கால இடைவேளைக்கு பின் மீண்டும் தொடங்கிய Bundesliga போட்டிகளில், பயர்ன் மியூனிக் அணி, வுல்ஸ்பர்க் அணியை 8–1 என்ற பெரும் கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் தனது முன்னிலையை மேலும் விரிவாக்கியது.

இந்த வெற்றிக்கு, வுல்ப்ஸ்பர்க் அணியினரின் இரண்டு அதிர்ச்சிகரமான சுயகோல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. அதே சமயம், போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வான மைக்கல் ஓலிஸ் இரண்டு கோல்களை அடித்து, பயர்ன் மியூனிக்கின் தாக்குதலை மேலும் கூர்மையாக்கினார். ஆரம்பத்திலிருந்தே முழுமையான கட்டுப்பாட்டை பெற்ற பயர்ன், தொடர்ச்சியான தாக்குதல்களால் வுல்ஸ்பர்க் பாதுகாப்பைச் சிதைத்தது.

நடப்பு சாம்பியனான பயர்ன் மியூனிக், இந்த சீசனில் இன்னும் தோல்வி காணாமல், தற்போது 44 புள்ளிகள் குவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *